my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - மே 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - செப்டம்பர் 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - சனவரி 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூன் 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-செப்டம்பர் 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-நவம்பர் 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-மார்ச் 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-யூன் 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - யூன் 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆகஸ்ட் 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சனவரி 3 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சனவரி 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்சனவரியா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
நாளிதழ் செய்திகளைப் படிக்க இங்கு கிளிக்குக
இவர்களுடைய துயர் பகிர்தலைப் பார்வையிட இங்கு கிளிக்குக
இங்கு கிளிக்குக
இங்கு கிளிக்குக
இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைக் காண இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைக் காண இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைக் காண இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைக் காண இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைக் காண இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்
கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய செயற்குழு
உறுப்பினர் மனோகரன் ஏகாம்பரம் (மணி) அவர்கள்
வளலாய் ஒன்றுகூடல் 2017 ஐ ஆரம்பித்து வைத்து
உரை நிகழ்த்தும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்

December 25, 2017

வளலாய் விடுமுறைக்கால இரவு விருந்து மற்றும் நடன நிகழ்வு டிசம்பர் 23 2017, மாலை 6 மணிக்கு, ESTATE BANQUET AND EVENT CENTRE, 430, NUGGET AVENUE, SCARBOROUGH, ON. M1S 4A4 என்னும் முகவரியில் இடம்பெற்றது. நிகழ்வுகள் யாவும் திட்டமிட்டவாறு நடைபெற உரிய நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த பார்வையாளர்களுக்கும் விழா ஒழுங்கமைப்பாளர்களுக்கும் நிகழ்சிகளை வழங்கி விழாவை சிறப்பித்தவர்களுக்கும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. நிகழ்வின் நிழல்களை இங்கு கிளிக்கி காணவும்

வளலாய் நத்தார் திட்டமிடற்குழுவின் தயாரிப்பு - காணொளி 2017

December 22, 2017

நினைவில் அகலா நன்றிகள்.

தந்தையாய் வழிகாட்டியாய் வீரத்தின் உருவமாய் அல்லும் பகலும் அயராமல் எம்மை நேரிய வழியில் வாழ்வியலில் வழிகாட்டியாய் விளங்கிய ஆருயிர்த் தந்தை சி.நா.சுப்ரமணியம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு எம்மை தேற்றி ஆறுதல் படுத்திய உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவர்க்கும் நேரிடையாகவும், தொலைபேசியூடாகவும், சமூகவலைத் தளங்களினூடாகவும் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர்வளையங்கள் வைத்தவர்களுக்கும், மலர்தூவி அஞ்சலி செலுத்தியவர் களுக்கும், அஞ்சலி உரை வழங்கியவர்களுக்கும்,  மருத்துவர்கள், தாதிமார் களுக்கும் இறுதி வழிஅனுப்பும் கிரியைகளை நேர்த்தியுடன் செய்தவர் களுக்கும், இன்றைய 31 ம் நாள் சாந்தி பிரார்த்தனைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் நாம் குறிப்பிட மறந்த பல வழிகளிலும் எமக்கு உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் பணிவுடன் நன்றி நவில்கின்றோம்.

அப்பாவின் இனிய நினைவுகளோடு,

மனைவி, பிள்ளைகள்

அமரர் சின்னதம்பி நாகமுத்து சுப்பிரமணியம் ஞாபகார்த்த புலமைப்பரிசில் நிதியம்

அமரர் சின்னதம்பி நாகமுத்து சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக, அன்னாரது குடும்பத்தினரால் “அமரர் சின்னதம்பி நாகமுத்து சுப்பிரமணியம் ஞாபகார்த்த புலமைப்பரிசில் நிதியம்” 20.12.2017 அன்று ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. மேற்படி நிதியமானது யா/இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் நிர்வகிக்கப்படும்.

ஆரம்பநிதி : ரூபா500,000.00 (ரூபா. ஐந்நூறு ஆயிரம்)
முதன்மை நோக்கம் : மாணவர்களின் விளையாட்டு செயற்றிறனை ஊக்கப்படுத்தல்

________

November 12, 2017

இடைக்காடு வளலாய் நலன்புரிச்சங்கத்தால் வருடாந்தம் நடத்தப்படும் தைப்பொங்கல் விழாவானது இம்முறை தை மாதம் 13 (ஜனவரி 27)ம் திகதி சனிக்கிழமை (27/01/2018) பி.ப 4:00 மணி தொடக்கம் பி.ப. 11.00 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு நிகழ்ச்சிகளை தரவிரும்புபவர் கள் 13/01/2018க்கு முன்னர் செயற்குழுவுக்கு அறியத்தருமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

Date:   27 Jan 2018 Saturday
Time:   4.00 pm – 11.00 pm

Location:

South Ruislip Community Association

Deane Park Hall

Long Drive

Ruislip

Middlesex

HA4 OHS

கட்டணம்

தனி நபர் £20

குடும்பம் £30

நிகழ்ச்சிப் பதிவுகளுக்கு

திருமதி கௌதமி பவன்  020 3674 2420

திருமதி சாந்துமதி ரவீந்திரன் 020 3490 5854

திருமதி சாந்தலட்சுமி சிவபரன்  07949812737

அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்

கந்தையா ரவீந்திரன், செயலாளர்,
இடைக்காடு வளலாய் நலன்புரிச்சங்கம்
UK

Idaikkadu Valalai Welfare Association
Great Britain

December 3, 2017

கிருஷ்ணகுட்டி தவக்குமார்

வளலாயை சேர்த பரமாநந்தத்தின் பெறாமகன் (பரமாநந்தத்தின் சகோதரி செல்லத்துரை நாகபூசணியம்மாவின் மூத்த மருமகன்)

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சன்னதி வீதி, வறணன் அச்சுவேலியை வசிப்பிடமாகவுமம் கொண்டிருந்த கிருஷ்ணக்குட்டி தவக்குமார் 28.11.2017 திங்கட்கிழமை நமக்கல் பலோபெரா தென் ஆபிரிக்காவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் தவரஞ்சனியின் (வலி. கிழக்கு வடபகுதி ப.நோ.கூ. சங்கம்) அன்புக்கணவரும், சாகித்தியா, அஷ்மிதா (யாழ். புனித தெரேசா மகளிர் கல்லூரி மாணவிகள்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணக்குட்டி, அக்கினேஸ் தம்பதி யினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் நாகபூசணியம்மா தம்பதியினரின் மருமகனும்,

உதயகுமார், (ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற பதிவாளர்) சூரியகுமாரி (பிரான்ஸ்), சந்திரகுமாரன், ஜெயக்குமார், விஜயகுமாரி, பிறேம்குமார் (ஜேர்மனி), சுகுமார், கிருஸ்ணகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தயாபரன், நளினி (லண்டன்), அனுஷா (ஆசிரியை கனகராயன்குளம் மகா வித்தியாலயம்), சத்தியபவன் (உப தபால் அதிபர், சாம்பல் தீவு), வேலுநாதன் (பிரான்ஸ்), ரவீந்திரன், விவேகானந்தன், பார்வதி, வளர்மதி, புஸ்பராணி, பவானி (ஜேர்மனி), இந்துமதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் நாளை (04.12.2017) திங்கட்கிழமை, அவரின் இல்லத்தில் நடைபெற்று பி.ப. 1.30 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக தீர்தாங்குள இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல் : குடும்பத்தினர்.

சன்னதி வீதி வறணன் அச்சுவேலி

தொடர்புகளுக்கு : +94 776222492, +94 776618111

December 1, 2017

திருமதி தவமணிதேவி சீவரத்தினம்

பிறப்பு : 22 மே 1942 இறப்பு : 30 நவம்பர் 2017

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், வரணனை வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி சீவரத்தினம் அவர்கள் 30-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சீவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சியாமினி அவர்களின் அன்புத் தாயாரும், ஞானேஸ்வரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் சற்குணதேவி, சுதந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், பாலசுப்பிரமணியம், பரம்சோதி, நகுலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவானி, நிசாந் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும், நியோமி, டானியல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஷானி, குருதக்‌ஷன், லக்‌ஷிகா, ஆகர்ஷன், அபியுக்‌ஷன், வர்சினி, வருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளலாய் கூனம்காட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

December 30, 2017

திரு இரத்தினசபாபதி வைரமுத்து அவர்கள்

மண்ணில்:
விண்ணில்: நவம்பர் 30 2017

வளலாய் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மொன்றியோல் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு இரத்தினசபாபதி வைரமுத்து (சின்னக்கடவுள்)  அவர்கள் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 30 2017) சிவபதம் அடைந்தார்.

காலஞ்சென்ற திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின் அன்புக் கணவனும்,

காலம் சென்றவர்களான வைரமுத்து செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், முத்துலிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பிரியமான மருகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், (பெரிய கடவுள்) சிவக்கொழுந்து ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசதுரை, நேசரத்தினம், (அவுஸ்திரேலியா) அன்னரத்தினம், (அவுஸ்திரேலியா) காலஞ்சென்ற குணரத்தினம், செல்வரத்தினம், (அவுஸ்திரேலியா) தங்கரத்தினம் (இலங்கை) ஆகியோரின் பிரியமிகு மைத்துனரும்,

கனடாவில் வசிப்பவர்களான வசந்துராதேவி, சரோஜினிதேவி,  கணேசலிங்கம், கணேசானந்தம், மிதிலாதேவி, காலஞ்சென்ற கணேசகுமார், கணேசராஜா,  அம்பிகாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்

கனடாவில் வசிப்பவர்களான கந்தசாமி, கணேசதாசன், உமா, நிர்மலாதிகுமார், (ஆதி) மாலினி, மகாதேவி, (மைதிலி) மற்றும் சுகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனும்

கனடாவில் உள்ள பானுஜா, தர்சன், கவீன்தன், துவாரகன், கவுசல்ஜன், ஜோவிதன், சஹானா, பிரியந்தி, கௌவத்ரிகா, பவித்திரன், பிரணவ், நிதின், அஸ்வின் ,தனுஜன், பிந்துஜா, தர்னிக்கா, ஆகியோரின் அன்புப் பேரனும்

ஐஸ்விக்கா, ஆருசன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்படுகின்றனர்.

தகவல்
குடும்பத்தினர்

Funeral Home:
4275, boul. des Sources  
Dollard-des-Ormeaux, Quebec 
H9B 2A6 
Viewing will be held on Saturday
December 2nd, 2017. 5:00pm-9:00pm

சனிக்கிழமை டிசம்பர் 2 2017.
பி.ப. 5:00 மணி - பி.ப.9:00 மணி பார்வைக்கு வைக்கப்படும்

Cremation will be held on Sunday
December 3rd, 2017. 9:00am-1:00pm

இறுதிச் சடங்குகள் மற்றும் தகனம்
டிசம்பர் 3, 2017 மு.ப.9:00 மணி - பி.ப. 1.00 மணி

Contact Numbers:

Ganesh (son): (514) 516-3415
Ananthan (son): (514) 620-6092
Saro (daughter): (514) 696-6003
Ambika (daughter): (514) 747-7989
Rajan (son): (514) 829-7326

November 23, 2017

திரு நாகமுத்து சுப்ரமணியம்

மலர்வு: 24 மாசி 1926 உதிர்வு: 22 கார்த்திகை 2017
   

யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிட மாகவும் கொண்ட திரு நாகமுத்து சுப்ரமணியம் (S.N.மணியம்) அவர்கள் 22-11-2017 புதன் கிழமை கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற நாகமுத்து- தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

சிவகாமிப்பிள்ளையின் பாசமிகு கணவரும்,

சிதம்பரப்பிள்ளை, சின்னத்துரை, தம்பு, தெய்வானை, ராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும், பரமேஸ்வரி, கங்காதேவி, வரலட்சுமி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

சிவகுமார், நவகுமார், ஜீவகுமார், காலஞ்சென்ற செல்வகுமார், சிவச்செல்வி, ஜெயகுமார், வாசுகி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், சியாமளா, பத்மாவதி, கலாராணி, குகதாசன், நிவஷா, சரவணபவான் ஆகியோரின் மாமனாரும்,

துஷ்யன், சுஜிதன், அபிலன், வர்ஷினி, ராதன், அஷ்வினி, அகிலினி, இலக்கியன், பிரணவன், காவியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளு மாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்

பார்வைக்கு : சனிக்கிழமை, நவம்பர் 25 2017, 4மணி பி.ப.-9மணி பி.ப.

தகனம் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 26 2017, 6மணி மு.ப. - 9 மணி மு.ப.

முகவரி:

LOTUS Funeral and Cremation Centre

121 Cityview Drive

Toronto, Ontario M9W 5A8

October 22, 2017

திரு நல்லதம்பி வரதராஜன்
ஒய்வு பெற்ற தபால் அதிபர்

வளலாயைப் பிறப்பிடமாகவும் வளலாய் வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்டிருந்தவருமான ஒய்வு பெற்ற தபால் அதிபர் திரு நல்லதம்பி வரதராஜன் அவர்கள் இன்று ஒக்ரோபர் 22 2017 ஞாயிறன்று அநுராதபுர வைத்தியசாலையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் வளலாயைச் சேர்ந்த நல்லதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகனும் சரசாலையைச் சேர்ந்த வல்லிபுரம் சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மருமகனும் பரந்தனைச் சேர்ந்த திருமதி தங்கமணி வரதராஜனின் அன்புக் கணவரும் யசோதா (வவுனியா) தயாளினி (ஐக்கிய இராச்சியங்கள்) ராஜசேகர் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

வளலாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சற்குணம் அன்னலட்சுமி தவமணிதேவி மல்லிகாதேவி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்

தகவல் : மருமகள் திருமதி காவேரி வீரசிங்கம்

திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்

September 23 1956 October 22 2017

வளலாயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன் ஒக்ரோபர் 22 2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திரு தில்லைநாதனின் அன்பு மனைவியும், காலம் சென்ற நடராசா இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த மகளும், கல்வியங்காட்டைச்சேர்ந்த காலம் சென்ற கந்தப்பிள்ளை பவளம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

உஷா கஜந்தினி மயூரன் யசிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்

கிரிதரன், ஜெயானந்தன் ஆகியோரின் அன்பு மாமியும், சதுர்ஷா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்

பேரின்பநாயகம் (பழனி), விமலாதேவி (கலா), அருமைநாயகம் (அருமை), விக்கினேஸ்வரநாயகம் (கண்ணன்) ஆகியோரின் பிரியமான சகோதரியும்,

பரமநாதன், பேரின்பநாயகி, யோகநாதன், மனோகரி, சிவானந்தம், தயாவதனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிசாந், சர்மிளி, மீனகா, துளசிகன், ஆகியோரின் அன்பு அத்தையும் துஷிக்காவின் பெரியம்மாவும் ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு தயவாய் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்

தகவல் :குடும்பத்தினர்

பார்வைக்கு :

25/10/2017

புதன்கிழமை

மாலை பி.ப. 5மணி – பி.ப. 9 மணி

26/10/2017

வியாழக்கிழமை

காலை மு.ப. 8 மணி – மு.ப. 10 மணி.

இறுதிச் சடங்குகள்:

26/10/2017

வியாழக்கிழமை

காலை மு.ப. 10மணி – மு.ப. 12 மணி.

 

முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3 

முகவரி: St John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7

தொடர்புகளுக்கு

மகன் மயூரன் (இலங்கை) +94 774955668
மகன் யசிந்தன் +1 647 888 7484
மருமகன் கிரி +1 647 885 7602
சகோதரன் பழனி +1 647 409 7616
சகோதரன் அருமை +1 647 466 9335
சகோதரி கலா +1 416 264 9229
மருமகன் ஜெயம் +1 416 875 2961

October 18, 2017

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், வரணனை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சரவணபவான் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பவானி அவர்களின் அன்புத் தாயாரும், பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மாமியாரும், தவமணிதேவி, சற்குணதேவி, சுதந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சீவரத்தினம், பரம்சோதி, நகுலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும், சியாமினி, நிசாந் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும், நியோமி, டானியல் ஆகியோரின் அன்பு மாமியாரும், துஷானி, குருதக்‌ஷன், லக்‌ஷிகா, ஆகர்ஷன், அபியுக்‌ஷன், வர்சினி, வருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளலாய் கூனன்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளு மாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

 

October 3, 2017

திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை

அதிபர்- அம்பாறை பொறியியல் நிறுவனம்
விரிவுரையாளர்- பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரி
ஆசிரியர் நைஜீரியா

தோற்றம் : 30 ஏப்ரல் 1942 மறைவு : 1 ஒக்ரோபர் 2017

யாழ். கரவெட்டி மத்தொனியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

மேலதிக விபரங்களுக்கு

தகவல்
தலைவர் கணபதிப்பிள்ளை கருணாமூர்த்தி

August 26, 2017

2016 ம் வருட கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரணதர மற்றும் உயர்தர) பரீட்சைகளில் சிறப்பு பெறுபேறுகளை பெற்ற வளலாய் மாணவர்களுக்கு வளலாய் பிள்ளையார் ஆலயத்தில் ஆடிப்பூர தினத்தன்று (யூலை 26 2017 புதன்கிழமை) ஒவ்வொருவருக்கும் காளஞ்சி பிரசாதத்துடன் ஊக்குவிப்புத் தொகையாக தலா 5000 இலங்கை ரூபாவும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இவற்றிற்கு தேவைப்படும் பணத்தை கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்தது. இவ்நிகழ்வு சிறப்பாக இடம் பெற உதவிய முன்னாள் கல்வி கோட்டப்பணிப்பாளரும் சட்டதரணியுமான நாகலிங்கம் சத்தியநாதன் வ. யோகநாதன் மற்றும் கார்த்திக் ஐயா ஆகியோரை பாராட்டுவதோடு சித்தி பெற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் மேலும் மேலும் வெற்றிகள் பெற்று நாட்டின் சிறந்த குடிமக்கள் ஆகவும் கல்வியாளர்களாகவும் வெற்றிபெற எல்லாம் வல்ல வளலாய் பிள்ளையாரை வழிபட்டு, வாழ்த்தும் - கனடா வாழ் வளலாய் உறவுகள். இவ்நிகழ்வுகளின் நிழல்களும் சித்தியடைந்த மாணவர்கள் விபரமும் கீழே இணைக்கப் படுகின்றன.

my images

August 20, 2017

ஐக்கிய இராச்சியங்கள் - இடைக்காடு வளலாய் நலன்புரிசங்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட் கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வின் நிழல்களை கீழேயுள்ள முதலாவது படத்தைக் 'கிளக்கி' யும் கடற்கரைப்பயண நிழல்களை இரண்டாவது படத்தைக் 'கிளக்கி' யும் காணலாம்

 

எங்கள் வாழ்வும் எங்கள் வழியும்
சந்நிதியான் சந்நிதியில்.....

தொண்டைமான் ஆறு - அது
தொடுகிறதே கடலோடு
கண்கவர் வண்ணம் எங்கும்
கவின்சோலை நிழலோடு
அண்டையிலே அவனிருப்பான்
தொண்டர் குறை தீர்த்திடுவான்
எண்ணி வரும் அனைவரையும்
ஏற்றிடுவான் கனிவோடு
கண்டவரும் கேட்டவரும்
கனிந்தங்கே உருகிடுவர்
இன்றுவரை அவனருளே
சந்நிதியான் சந்நிதியில் - செல்வச்
சந்நிதியான் சந்நிதியில்

வேலெடுத்த வேந்தனுக்கு
வேறில்லை அங்குருவம்
ஓதுவார் எல்லோரும்
ஓதலாம் என்றே
ஓதாதார் பூசையிலே
ஒளிவெள்ளம் பெருகிவிடும்
கற்பூர ஒளி தீபம்
கண்வழியே மனங்கூடும்
காற்றோடு அதன் தூபம்
கருத்திருந்து மணங்கமழும்

அன்னதானக் கந்தனென்றால்
அறியாதார் யாருளரோ
பசியறியா வாழ்வளிக்க
பட்டினியைப் புறந்தள்ள
சந்நிதியான் திடம் கொண்டான் அங்கோர்
அன்னதான மடம் கொண்டான்

ஆடி அசைந்து மெல்ல விட
ஆவணியில் விழாக்காணும்
கோடை வெயில் ஒளியோடு
கொடியேற்றம் திறம் சேர்க்கும்
மூவைந்து நாட்களுமே
முழுவிழாக் கோலம் கொள்ளும்
தேர் தீர்த்த நாட்பொழுதில்
ஊர்மனையில் யாரிருப்பார்
திருத்தலமும் திருவிழாவும்
கருத்தினிலே நிறைந்துவிட
நடந்தும் கடலைக் கடந்தும்
புதுப்பாலம் தனிலே
புத்துணர்வாய்ப் புகுந்தும்
அலையாடும் கடலருகே -சனத்
திரள் வெள்ளம் தரைதள்ளும்

வாழ்வோடு கலந்திருப்பான் - எங்கள்
வழிதோறும் தடம் பதிப்பான்
வேலாளன் தாராளம்
விழி செல்லும் அவன் மீதே
பாரெங்கும் படர்ந்துவிட
நேர்ந்துவிட்ட போதினிலும்
சார்கின்றோம் அவன் கழலே

கவிதாயினி சுதா குமரன்

August 17, 2017

வளரும் வளலாய் பாரதி சனசமூகநிலைய நிழல்கள் கீழே

August 10, 2017

வளலாய் பிள்ளையார் பெருந்திருவிழா காட்சிகளை அன்றாடம் உடனுக்குடன் வலையேற்ற உதவியாக நாள்தோறும் எல்லா நிகழ்வுகளின் நிழல்களையும் உடனுக்குடன் அனுப்பி உதவிய அறங்காவல் சபைத்தலைவர் ச ஞானரூபன் அவர்களுக்கும் மற்றும் தீர்த்தத்திருவிழா காட்சிகளை மண்வாசத்தில் பதிவு செய்து உதவிய குமரன் நாராயணசாமி அவர்களுக்கும் கொடியேற்ற மற்றும் கொடியிறக்க நிகழ்வுகளின் மேலதிக படங்களை மண்வாசத்தில் வலையேற்றி உதவிய அரவிந்த் சர்மா அவர்களுக்கும் புலம் பெயர்வாழ் வளலாய் உறவுகளின் மனம் கனிந்த நன்றிகள்

August 8, 2017

வளலாய் பிள்ளையார் பூங்காவனத்திருவிழா 2017 இன் நிழல்களை பார்வையிட கீழுள்ள படத்தில் கிளிக்குக

வளலாய் பிள்ளையார் தீர்த்தத்திருவிழா 2017 இன் நிழல்களை நின்று நிதானித்து பார்வையிட கீழுள்ள படத்தில் கிளிக்குக

July 29, 2017

1,2,3,4,5,6,7,8 ம் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா நிழல்கள் இணைக்கப் பட்டுள்ளன மொத்தம் 175 நிழல்கள் கீழே
வளலாய் பிள்ளையார் பெருந்திருவிழா (பிரமோற்சவம்) 2017
நிழல்கள்

my Image

வளலாய் பிள்ளையார் பிரமோற்சவம் (பெருந்திருவிழா) 2017 இன் நிழல்களை நின்று நிதானித்து பார்வையிட பிள்ளையார் கடிதத் தலைப்பில் கிளிக்குக

July 18, 2017

கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றுகூடலில் ஜுலை 15 2017 அன்று மார்க்கம் மில்னே பூங்காத்திடலில் கலந்து கொண்டு சிறப்பித்த வளலாய் உறவுகளுக்கும் சமைத்த உணவுவகைகளையும், சமைக்காத பதப்படுத்திய இறைச்சி வகைகளையும், தயாரித்து வழங்கிய அன்பர்களுக்கும் மெய்வல்லுநர் திறனாய்வுகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் திறான்ய்வுகளை ஒழுங்கமைத்து வெற்றியாளர்களை அடையாளங்காண உதவிய தன்னார் வலர்களுக்கும் (தொண்டர்கள்) தணல் அடுப்பில் இறைச்சியோடு எரிக்கும் வெயிலில் வெந்தவர் களுக்கும் இவ்வருடமும் பணம் வழங்கி வளலாய் வாழ் எமதுறவுகளுக்கு தொடர்ந்து உதவ எமக்கு உத்தரவு வழங்கிய அன்பர்களுக்கும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய செயற்குழு மனமார்ந்த தனதன்பையும் நன்றியையும் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்து கின்றது.

July 16, 2017

கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய ஒன்றுகூடல் 2017
நிழல்கள்

my images

நீங்கள் விரும்பியவாறு விரும்பிய கால அவகாசத்தில் வளலாய் ஒன்றுகூடல் 2017 படங்களை பார்வையிட கீழேயுள்ள பதாகையில் (Banner) கிளிக்கவும்

June 9, 2017

வளலாய் பிள்ளையார் கோயில் உள்வீதிக்கு பகுதி பகுதியாகவேனும் கூரையிட சித்தம் கொண்ட மக்களும் அறங்காவல் குழுவினரும் பிள்ளையார் அருளால் நல் உள்ளம் கொண்ட அவுஸ்திரேலியா வாழ் வளலாய் உறவுகளின் ஆதரவுடன் முதலில் தெற்கின் ஒரு பகுதிக்கும் மற்றும் கிழக்குப் பகுதிக்கும் கூரையிடுவதற்கான வேலைகளை ஆரம்பித்தனர். இப்பணியின் போது பிரதான மண்டபக்கூரையுடன் இணைக்க வேண்டிய தேவையின் காரணத்தால் பிரதான மண்டபக் கூரையைப் பிரித்த போது அவற்றை தாங்கியிருந்த மரங்களும் சட்டகங்களும் மக்கி மீள உபயோகிக்க முடியாத அளவுக்கு கெட்டிருந்ததால் அவற்றையும் புதிதாக அமைக்க வேண்டி அவற்றை மாற்றும் கட்டாயத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே தற்போது அவுஸ்திரேலிய வாழ் வளலாய் உறவுகள் வழங்கிய வழங்கபோகும் உதவிகளில் எவ்வளவு சதுர அடிகளுக்கு கூரை அமைக்க முடியுமோ என தெரியாதலால் கனடா வாழ் வளலாய் உறவுகளின் உதவியை நாடியுள்ளனர். தற்போதுள்ள கூரையின நிலைப்பாட்டை மேலேயுள்ள வளலாய் இன்று பகுதியில் உள்ள நிழல்கள் சித்தரிக்கின்றன.

July 7, 2017

நடைபெறும் கூரைப்பணிகளின் நிழல்களைக் காண கீழேயுள்ள கடிதத் தலைப்பைக் 'கிளிக்' கிக் காணவும்

July 5 2017
கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய வரவு செலவு அறிக்கை

2016 - 2017

விபரம்

கனேடிய டாலர்களில்

வரவு

செலவு

கையிருப்பு (யூலை 23 2016)

672.35

 

ஒன்றுகூடலில் சேர்ந்த பணம்

3515.00

 

திருமதி விஜயலட்சுமி கருணாமூர்த்தி வளலாய் பிள்ளையார் கோயிலில் வெள்ளிக்கிழமை மேலதிக பிரசாதம் வழங்குவ தற்கெனக் கொடுத்த பணம்

500.00

 

வளலாய் ஐயர் சம்பளத்திற்கு என தபோ டிலோஜன், தம்பு மணி, க. கருணாமூர்த்தி க. சிவபாலன் (அப்பன்), வீரசிங்கம், பாலசந்திரன், நா. சின்னத்தம்பி (சின்னண்ணை), சின்னத்தம்பி குடும்பம் (ரத்தினம்), ஏகாம்பரம் குடும்பத்தினர், மதிவதனி சத்தியநாதன், த. மதனமோகன் (மோகன்) வழங்கிய வகையில்

1100.00

 

மொன்றியோல் வாழ் வளலாய் உறவு வழங்கிய வகையில்

200.00

 

2016 ஒன்றுகூடல் - தணல் அடுப்பில் வேகவைப்பதற்கான இறைச்சி கொள்வனவு மற்றும் வெற்றிக் கோப்பைகள் கொள்வனவு (யூலை 23 2016)

 

741.33

திரு செல்வத்துரை சரவணமுத்து - மலர்வளையம்
(ஒக்ரோபர் 28 2016)

 

120.00

திருமதி தங்கம்மா கந்தையா - மலர்வளையம்
(சனவரி 27 2017)

 

120.00

வெள்ளிக்கிழமை மேலதிக பிரசாதம்
(பெப்ரவரி 11 2017)

 

250.00

திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் - மலர்வளையம்
(மார்ச் 17 2017)

 

150.00

வளலாய் ஐயர் சம்பளம் அனுப்பிய வகையில் (மார்ச் 20 2017)

 

1100.00

2017 - சிறப்புப் வெற்றிகள் பெற்ற வளலாய் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கிய வகையில் (மார்ச் 25 17)

 

151.00

வெள்ளிக்கிழமை மேலதிக பிரசாதம்
(மே 16 2017)

 

250.00

திரு தம்பு சந்திரபாபு
(யூன் 10 2017)

 

150.00

2016 - சிறப்புப் வெற்றிகள் பெற்ற வளலாய் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கிய வகையில் (யூன் 22 17)  

880.00

திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா - மலர்வளையம் (யூலை 09 2017)  

100.00

கையிருப்பு (யூலை 15 2017)

 

1975.02

 

5987.35

5987.35

June 14, 2016

May 19, 2016

July 8, 2017

திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா

பிறப்பு : 14 யூலை 1938 இறப்பு : 5 யூலை 2017

 

வவுனியா புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வள்ளிபுரம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

நவி(கனடா), வவி(கனடா), பத்மா(கனடா), பாமா(கனடா) , சந்திரா(கனடா), சிவா(Suruthy Take Out- கனடா), குஞ்சு(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நந்தினி(கனடா), ராணி(கனடா), தேவராஜா(கனடா), சிறி(கனடா), சுபா(கனடா), பத்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம், தம்பாபிள்ளை, மற்றும் பூமணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பூபதி, பொன்னம்பலம், இரத்தினம், குலேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திருமால் - கீதா, கஜன், சஜிகா, நிருஜிகா, நவிஜிகன், நந்ஜிகா, சஞ்ஜிகன், ரஜீதர், ரஜீனா, விபூசன், அபிராமி, நிலானி, தர்ஜிகா, லோஜிகா, கோஜிகன், கிருஷாந், சீசோஜி, கேஜீகர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஞ்சனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

July 1, 2017

திரு கந்தையா அமிர்தஞானம்
ஓய்வு நிலை பட வரைஞர்
Retired Draftsman

யூலை 14 1938 யூன் 24 2017

வசாவிளானைப் பிறப்பிடமாகவும் இடைக்காடு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு கந்தையா அமிர்தஞானம் அவர்கள் இன்று 24/06/2017 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா-மாணிக்கம் (வசாவிளான்) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான தம்பு-ஆச்சிப்பிள்ளை (இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும்

சிவபாக்கியத்தின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானம், கண்மணி மற்றும் ராஜமணி, ஜெயமணி, ஈஸ்வரஞானம் ஆகியோரின் அன்புச்சகோதரரும்

ஞானசுயேதா (Australia), ஞானதிலீபன் (UK), ஞானபிரபா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஜெயசிறி, திபாஜினி, சிவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்

சிறிராம், ஜெசீதா, அமிர்தா, அமிற்சன், சிவலக்சன், சுவேதிகா, சுலக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் வவுனியாவில் 27/06/2017 செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இத்தகவல் உலகெங்கிலும் வாழும் வளலாய் உறவுகளுக்காக இணையத்தில் இணைக்கப்படுகின்றது.

கனடா வாழ் வளலாய் உறவுகள் திபாஜினியின் மாமாவின் மறைவுக்கு தங்கள் அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடை இறைவ னைப் பிரார்த்திக்கின்றனர்.

முகவரி

27/3B 3rd Lane
Pandarikkulam
Vavuniya
Sri Lanka

தகவல் : ஞானதிலீபன்

தொடர்புகளுக்கு

LONDON (UK) +44 208 573 8923
SRI LANKA +94 24 222 4254

June 11, 2017

தம்பு சந்திரபாபு

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு சந்திரபாபு அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, தங்கம்மா (வளலாய்) தம்பதிகளின் கடைசி மகனும், நல்லையா இராசேஸ்வரி (இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவரதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற பிரியந்தன், மற்றும் பிரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருள்நாயகி (அவுஸ்திரேலியா), திருநாவுக்கரசு (திரு- கனடா), புஷ்பராணி (வண்ணம்- கனடா), விவேகானந்தசாமி (கந்தவேள்- அவுஸ்திரேலியா), சந்திரவதனா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கார்லோ பெர்ணான்டோ, சாந்தா, தவராஜா, வனஜா, சுந்தரலிங்கம், யசோரதி இளமுருகன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சரூபன், சர்மினி, திருசாந், திரோஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,ஹர்ஷா, நளின் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

சேன் பெர்ணான்டோ, சரண் கவுண்(Saran Cowan), சிவகஜன், நிவேரன், நிரஞ்சனா லோகினிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

யஷ்மின், பிறொன்ரி, திருஷிகா, லோகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

சந்திரபாபு பிரியந்தன்

அன்னார் காலஞ்சென்ற தம்பு சந்திரபாபு மற்றும் திருமதி நவரதி சந்திரபாபு தம்பதிகளின் மகனும் பிரவிந்தனின் அன்புச் சகோதரனும் ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர் மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

தகவல் : குடும்பத்தினர்

சுவடுகள்

July 30, 2016

 கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி பரிசளிப்பு விழா நிகழ்வுகளின் நிழல்கள் 11ம் பக்கம், ஆடி 29 ம் திகதிய தினக்குரல் நாளிதழில் - ஏனைய பிரமுகர்களுடன் வளலாயைச் சேர்ந்த அதிபர் வேலழகன் சண்.

May 18, 2016

வளலாயைச் சேர்ந்தவரும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபருமான திரு. வேலழகன் சண் அவர்கள் திறந்த வெளி பல்கலைக்கழகம், பொதுநல வாய நாடுகளின் கற்றலுக் கான பிரிவினருடன் இணைந்து நடாத்தும் ஆசிரியர் கல்வியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழா சர்வதேச பண்டாரநாயக்க மண்டப அரங்கில் இடம்பெற்றது அச்சமயத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

திரு. வேலழகன் சண் MATE (I)

[Master of Arts in Teacher Education (International)

திரு வேலழகன் சண் அவர்கள் அடைந்த இவ்வெற்றிக்காக அவரை மனமார வாழ்த்தும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம், அவர் தன் வாழ்வில் மேன்மேலும் வெற்றிகளையும் பதவி உயர்வுகளையும் பெற எல்லாம் வல்ல வளலாய் பிள்ளையாரை வழிபடுகின்றனர்

December 02, 2016

April 28, 2016

Dr. சுதர்சன் கணபதிப்பிள்ளை

வளலாய் இணையத்தினால் அடையாளங்காணப்பட்ட வளலாய் ஆளுமைகளில் ஒருவரான திரு சுதர்சன் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு அவுஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தால், கணக்கியலில் அவர் எழுதிய ஆய்வேடுகளுக்காக ஆய்வு முனைவர் பட்டம், ஏப்ரல் 19ம் திகதி வழங்கப்பட்டது. அந்நிகழ்வில் அவர் குடும்பத்தாருடன் கலந்து கொண்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.

அவர் ஆர்வம் காட்டிய ஆய்வுகள் தன்விபரம் ஆகியவற்றை பின்வரும் இணைப்பைக்  ‘கிளிக்’ செய்து அறிந்து கொள்ளலாம்.

http://www.deakin.edu.au/profiles/sutha-kanapathippillai

அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தமது வாழ்த்துக் களையும் பாராட்டுக்களையும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியமும் வளலாய் இணையமும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றன.

December 3, 2015

சுதர்சன் கணபதிப்பிள்ளை டீக்கின் பல்கலைக் கழகம் அவுஸ்திரேலியா இல் வர்தகம் மற்றும் சட்ட பீடத்தில் கணக்கியல் துறையில் விரிவுரையாளராகக் பணியாற்றி வருகிறார். விரிவுரையாளராகப் பணியாற்றும் இவருக்கு கணக்கியல் துறை தலைவர், ஆசிரியப் பணியில் இவரின் சிறப்புப் பங்களிப்புக்காக கார்த்திகை மாதம் 26 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு கணக்கியல் துறை விருது வழங்கி கௌரவித்துள்ளார்.  இவருக்கு இவ்விருது கிடைத்தமையை வளலாய் இணையம் பாராட்டி மகிழ்வதோடு இச்செய்தியை புலம்பெயர் நிலங்களில் வாழும் வளலாய் உறவுகளுடன் பகிர்வதில் பெருமிதம் கொள்கின்றது.

கவிதாயினி சுதா குமரன்

October 27, 2016

திரு நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
ஈராண்டு நிறைவு 
நாள் - 05.11.2016.
திதி - ஐப்பசி வளர்பிறை சஷ்டி (ஆறாம் நாள்)

ஒரு விவசாயி

கலட்டியும் கள்ளியும் கலந்த பரப்பில்
விரட்டி விரட்டிப் பசுமை தரும் விவசாயக்குடியில்
பிறந்ததால் பிறந்தது பெருநாட்டம்
இறக்கையிலும் இருந்தது பசுந்தோட்டம்

இரட்டைப் பயிர்ச்செய்கையில் என்றுமே நாட்டம்
இதனால் விளைந்தது பற்பல மாற்றம்.
பேராற்றங் கரையோரம் தனிலும் - உன்
பேராற்றல் கண்டது மருததேசம்

நன்செய் புன்செய் நிலமெல்லாம்
உன் செய் நிலமானால் உயரும்
விண்செய் முகில்கூட மயங்கும்
தண்மையின் உருமழையாய் மலரும்.

ஏர் பூட்டும் இயந்திரமும் கொண்டாய் - அதனால்
நேரேற்றம் பற்பலவும் கண்டாய்
ஏறெடுத்துப் பார்க்கும் வண்ணம் - எம்மை
ஏடெடுத்துப் படிக்க வைத்தாய்

பலவரிகள் புனைந்த மகள் நானே
ஒருவரியும் எழுதிலனே நினையே
இக்கவியை சமர்ப்பிக்கும் நாளே
அக்குறையும் நிவர்த்தியுறும் தானே.

கவிதாயினி சுதா குமரன்

July 13, 2016

வளலாய் மண்ணிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடித்த எமது பேரனார் ஆறுமுகம் நாகலிங்கம் அவர்கள் மறைந்து இருபத்தைந்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அந்நாளில் அவர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகள் கலந்த பதிவுகள்

பனை

கற்பனை உலகம் கண்ட மரம்
விண்ணுலகில் உண்டாம் கற்பகதருவாம்
இப்புவி தன்னில் அப்பயன் தந்தது
கற்பனை மரமல்ல கரும்பனை ஒன்றே

பார்த்துப் பார்த்து வளர்க்கவில்லை
ஏந்தி நீரை ஊற்றவில்லை
கிளையின்றி வளர்ந்தாலும்
அளவின்றிப் பயனளிக்கும்

கீழிருந்து மேல் நோக்கி
கிழங்கு தொட்டு வளமாகும்
ஊர்தோறும் பனந்தோப்பு
உயரந்துயர்ந்து வளரந்திருக்க

நாடு தோறும் சூழ்ந்த வினை
நலிவடைய வைத்ததுவே
கூவிவந்த குருட்டுக் கணை
ஆவிகெடச் செய்ததுவோ ?
ஒங்கி நின்ற உருவங்கள்
ஒருக்களித்துப் படுத்தனவோ ?

உத்தமர்க்கு உதாரணமாய்
இத்தரணி புகழ்கின்ற
உன் நிலையே இதுவென்றால்
உன் நிழலிருந்தோர் நிலையென்ன ?

முன்னோர் கண்ட பன்னம்

ஆடம்பரப் பொருட்களுக்கு
அவசியமற்ற காலத்தில்
கண்ணைப்பறிக்கும் நிறங்களைக்
கருத்தில் கொள்ளா நேரத்தில்
முன்னோர் எண்ணத்தில் உதித்து – கை
வண்ணத்தில் வளரந்த கலை பன்னம்.

பனையிலே ஓலை வெட்டி
பக்குவமாய் பதப்படுத்தி
பத்திரமாய் அதை வார்ந்து
அத்தனையும் கழிவின்றி
நார் ஈர்க்கு ஓலையென
நற்பன்னப் பொருளாகும்.

படுத்துறங்க பாய் முதலாய்
எடுத்து வைக்கப் பெட்டி கடகம்
பாரம் தூக்கப் பறியிருக்கும்
நாரும் அதில் சேர்ந்திருக்கும்.

வண்ண வண்ணப் பெட்டிகள்
வகை வகையாய் அடுக்கி வைத்து
எண்ணுகின்ற பொழுதெல்லாம்
எடுத்து அதில் பொருள் வைப்பர்.

கையடக்கப் பெட்டி முதல்
கனரகப் பெட்டி வரை
ஒவ்வொன்றாய்ப் பெயர் வைத்து
ஒன்றொன்றாய் சேர்த்திருப்பர்

இயற்கையொடு இயைந்த வாழ்வில்
இன்னலில்லா இன்பமயம்
செயற்கை கண்ட நெகிழியிலே
சிதைந்தது பன்னமும் தான்

பன்னத்தைப் பறிகொடுத்து  -  பிளாஸ்டிக்
வண்ணத்தில் வாழ்வென்று
கண்கவரும் பொருட்களிலே
எண்ணத்தைச் சிதறவிட்டோம்

என்னதான் கண்டோமென்று கண்ணைத்
திறக்கையிலே வழியெதுவும் தெரியவில்லை
விழி பிதுங்கி நிற்கின்றோம்.

 

வளலாயில் பட்டங்கள்

பொங்கல் காலம் வரப் பொங்குமின்பம் கூடவர

வங்கக் கடலோரம் வானுயர்ந்த பட்டம் விட

வாலிப நெஞ்சமெல்லாம் கோலப்பட்டம் கட்ட

நூலும் கோலுமாகத் திரிந்த காலமது.

 

கொக்குகள் வானில் கொடுநஞ்சுப் பாம்பைக்

கட்டியிழுத்துச் செல்வது போலிருக்கும் பல பட்டம்

நூலோடு நூலாக இணைந்திருக்கும் மின்னோட்டம்

உடுக்களோடு போட்டியாக ஒளி விளக்கேற்றி வைக்கும்.

 

மின்மினிப் பூச்சியெல்லாம் விண்ணிலே வீடுகட்டி

விரும்பி வாழப் போனதுபோல் நினைவுவரும்

மேல்வானின் பட்டங்கள் வளலாயைத் தரிசித்து

கண் சிமிட்டிச் சிரிப்பது போல் கற்பனையும் அதில் வளரும்.

 

வளலாயின் வான் வெளியில் வலம் வந்த பட்டமெல்லாம்

காணாமல் போய்விடக் கனடாதான் காரணமா?

பாழும் போர்சூழ்ந்து வளம்நிறைந்த வளலாயும்

மாளும் நிலையொன்று வந்தது தான் காரணமா?

 

வாழ்க்கை ஒரு வட்டம் என்ற வாக்கியமே மெய்யாக

வசப்பட்டிருக்கிறதே வளலாயும் மீண்டுமின்று

பறந்து சென்ற பட்டங்கள் திரும்பியினித் தான்வருமா?

வங்கக் கடற்காற்றை வசம் செய்யும் நிலைவருமா?

கவிதை வரிகள் சுதா குமரன்

மாணிக்கவாசகர் என்னும் பெயரேற்று - வளலாய்
மண்ணின் மைந்தனாக என்றும் வாழ்ந்தவரே!
மக்களுக்கு நல்ல தந்தை மட்டுமன்றி - மரு
மக்களுக்கும் நல்ல மாமனாக மிளிர்ந்தவரே!

எண்ணில் அடங்காதோர் எண்ணியலைக் கற்பதற்கு
கண்ணெனக் கணக்கறிவை கருத்துடனே ஈந்தவரே!
ஆசிரியப் பணியோடு ஆளுமையும் மேலோங்க
அரும்பணிகள் பலசெய்து அதிபராக உயர்ந்தவரே!

வானுறையும் தெய்வத்தின் வசப்பட்ட நாள் கடந்து
ஆண்டொன்று ஆனதென்று அறிவுதான் சொல்கிறது.
நியூட்டன் சொல்லாத நினைவீர்ப்பு விசையுந்த
நிகழ்வுகள் தான் முன்வந்து நிழலாகப் படிகிறது.

அகன்ற பெருவெளியில் ஒளியேற்றும் கதிரவனாய்
பகன்ற பெருங்கல்வி அகல் விளக்குகளாய் அகிலமெங்கும்
சுழன்று சுடர்விட்டு சுற்றிவரும் வேளையிலே
மறந்தும் உமையுலகம் என்றேனும் மறந்திடுமா?

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி

என்றும் குடும்பத்தினர் நினைவில்

கவிதை வரிகள் அன்பு மருமகள் திருமதி சுதா குமரன்

பாக்கு நீரிணையின் பருவக் காற்றுகள் தாலாட்டிச்செல்லும் ஒரு அழகிய கிராமம் வளலாய். கடற்கரையோடு கூடிய மணற்பாங்கான பிரதேசத்தையும், குளக் கரையோடு கூடிய களிமண் பிரதேசத்தையும், இன்னொரு புறத்தே செக்கச் சிவந்திருக்கும் செம்மண் வளத்தையும் கொண்ட பிரதேசம். ஆங்காங்கே கூடாரம் அமைத்தது போல் ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரத்தோப்புகள் - அணில்களின் கூடாரம். உணவுப் பொருளுடன் எட்டிப் பார்த்தால் கன்னத்திலே கோலமிட்டு தட்டிப்பறித்துச் செல்லும் காக்கைகளின் சரணாலயம். மிளகாய்த் தோட்டங்கள், கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் பச்சைக் கிளிகளின் மாநாட்டுக் கூடம். இந்த ஊரில் பெண்களைப் பார்த்தால் ரம்பை, ஊர்வசியிடம் வரம் வாங்கி வந்திருப்பார்களோ என எண்ணத் தோன்றும். 

இவையெல்லாம் இன்றல்ல. அது ஒரு காலம். வான் வழித் தளத்துக்கு வழி கொண்ட காரணத்தாலோ என்னவோ இரண்டு தசாப்தங்களின் இருள் சூழ்ந்த படலத்தில் இங்கே கானகம் குடி புகுந்தது. மீண்டும் காலத்தின் கதவுகள் மெல்லத் திறக்கப் பட்டு இவ்வூரின் ஒரு பகுதிக்கு வழி விடப்பட்ட போது வளலாய் விநாயகப் பெருமானின் வாயில் மீண்டும் தட்டப்பட்டது. அவ்வேளையிலே என் மனதில் தோன்றிய வரிகளின் விவாதத்தை இங்கே பிரதி செய்வதில் தவறில்லை என எண்ணுகின்றேன். நன்றி.

வளலாய்ப் பிள்ளையார்
*******************
வளலாய்ப் பதியுறையும்
வேழ முகப் பெருமானே !
வள்ளி மணாளனுக்கு மூத்தவனே
பிள்ளையார் எனும் பேறு பெற்றவனே!

ஆலமரம் நுழை வாயில்
அரசமரம் முன்வாயில்
அமர்ந்திருக்கும் கோலமது
ஆகீசன் உன் சிறப்பு.

ஊரெல்லாம் ஒலியெழுப்பும்
உயர் மணிக் கோபுரத்தின்
கண்டா மணியோசை
டாண் டாண்என்றொலிக்கும்

சங்கு ஒலிக்கும் சங்கீதம்
சந்தனத்தின் நறுமணத்தில் - உன்
சந்நிதியில் சனத்திரளாய்
சரணடைய வைப்பவனே!

நாரதரின் சதிவலையில்
நாதன் அவன் சிக்கி நின்று
ஞாலத்தைச் சுற்றி வர
கால அவகாசம் இட்டான்.

பெருச்சாளி மீதேறிப்
பெருங்கடலைத் தாண்டாமல்
அருகிருந்த பெற்றோரை
ஆறுதலாய் சுற்றி வந்தாய்.

உயர்மதிக்காரன் என்று
உன்னைப் புகழ்ந்தார்கள்
கணபதியே உன் வித்தையை நீ - இக்
கற்பதியில் காட்டினாயோ?

வளலாய்ப் பிள்ளையாரே
வனவாசம் போ என்று
யார் உன்னைப் பணித்தாரோ
நாரதரும் வந்தாரோ?

பெருச்சாளி மீதேறிப்
பெருங் காட்டைத் தேடாமல்
கருவறையில் அமர்ந்தபடி
காடாக்கி வாழ்ந்தாயோ?

வனவாசம் முடித்திருக்கும்
வளலாய்ப் பிள்ளையாரே
இருகரமும் செவிபற்றி
இருந்து எழுந்து வணங்குகிறோம்.

வளலாயின் வலி சுமந்த வரிகளாக இப்பதிவு 
******************************

எந்தையும் அவர் தந்தையும் 
சிந்தையிலே நிறைவுடனே 
சிந்திய வியர்வைச் 
செம்மையின் செழுமை எங்கே?
வரலாற்றுச் சுவடுகளின் 
வாழ்விடங்கள் தானெங்கே?


சிட்டுக் குருவிகளாய் 
சிறகடித்துப் பறக்கையிலே 
பட்டுக் கன்னங்களை 
தொட்டுத் தழுவிய 
மல்லிகையின் மணம் சுமந்த 
மெல்லிளந் தென்றல் எங்கே?


அணிலோடு இணையாக 
தனியாக ஊஞ்சலிலே 
அரங்கேற்றம் செய்யாமல் 
ஆடிய மா மரமெங்கே?
தேடிய மாங்கனி எங்கே?

வெள்ளம் வழிகையிலே 
துள்ளியதில் விளையாடி 
பள்ளிக்கு நாம் சென்ற 
வெள்ள வாய்க்கால் வீதி எங்கே?

புங்கடி புளியடி 
இவ்விடம் எவ்விடமென 
கண்ணைத் திறந்து கொண்டு -சொந்த 
மண்ணில் நின்று கொண்டு 
கேட்டுக் கொள்கின்ற 
வாட்டம் தானென்ன?


வளலாயின் வலி சுமந்த 
வரிகளாக இப்பதிவு 
பெரும்பான்மைப் பதிகளுக்கு 
பொருந்துகின்ற ஒரு பதிவு.

Content 5

தொல்காப்பியம் கூறும் நால்வகை நிலங்களில் வயலும் வயல் சார்ந்த நிலமுங் கொண்ட மருதநிலம் தலைசிறந்தது. அத்தகைய மருதநிலப் பண்புகளை மையமாகக் கொண்டதே வளலாய் கிராமம். நீர்வள நாகரிகத்தின் ஆரம்பகால நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் இங்குள்ள வயல் நிலங்களும் குளங்களும் காணப்படுகின்றன. குளங்களின் நீர் பயன்பாடு, நீர்ப்பங்கீடு என்பவற்றை நடைமுறைப் படுத்த ஏற்பட்ட நிர்வாகம், அதனைத் தொடர்ந்து அமைந்த கோவில்கள், வைத்தியசேவை, கல்விச்சேவை மற்றும் சமுகப்பணி கள் என்பனவற்றை நிர்வகித்தமைக்கான வரலாறுகளைக் கொண்டது  எமதுவளலாய் கிராமம். ஆரம்பகால கிராம நிர்வாகம் பற்றிக் குறிப்பிடும்உள்ளுராட்சிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இவற்றுக்குச் சான்றாகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட வளலாய் கிராமம் ஈழத்தின் தலையாய் விளங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கடலும் கடல் சார்ந்த இடமாகப் பாக்கு நீரிணையும் எமது கிராமத்தை வளப்படுத்துகின்றன.            மேலும் படிக்க...

தலைமைத்துவங்களை வரலாற்றில் உருவாக்கிய மருதநிலத்தின் பண்புகளை மையமாக கொண்டதே வளலாய் கிராமமாகும் நீர்வளநாகரிக காலத்தில் இருந்தே மக்கள் குடியிருப்புக்கள் இக்கிரமத்தில் இருந்துள்ளது. குளங்கள் பலவற்றிக் கிடையே நாகதம்பிரான் கோவில் அதனைசுற்றி வயல்கள் வயல்களினை அடுத்து தோட்டங்கள் அதனை சுற்றி மேட்டு நிலத்தில் குடியிருப்புக்கள்.       மேலும் படிக்க...

இங்குள்ள வளலாய் பிள்ளையார் கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். யாழ்பாண அரசர் காலத்தில் இருந்து வழிபடப்படும் பழம் பெரும் கோவில் இதுவாகும். இக்கோவிலின் ஆதிவரலாறு தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்ட நாகர்கோவிலில் இருந்து ஆரம்பமாகிறது. 15ம் நூற்றாண்டில் சேரமரபினரான திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நாகர்கோவில் பகுதி  இருந்த காலத்தில், கார்காத்தவேளாளர் குல நிலப் பிரபுவான வீரமாணிக்கம் என்பவர் அப்போதைய மன்னர் ஆட்சியில் அங்கு விளையும் உணவுப் பொருட்களைஅரசுசார்பில் பொறுப்பேற்று சேமித்துப் பாதுகாத்து வைப்பதோடு, பற்றாக் குறை ஏற்படும் காலத்தில் அரசு ஆணைப்படி பொதுமக்களுக்கு வழங்கும் பொறுப்பாளராகவும் இருந்தார்.  மேலும் படிக்க...

தன்னார்வல மக்கள் குழுக்கள்...

கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள்
Union of Valalai People Living in Canada

செயல் அலுவலர்கள்

தலைவர் : கருணாமூர்த்தி கணபதிப்பிள்ளை B.Sc.
President : Karunamoorthy Kanapathipillai B.Sc.

செயலாளர் : கிருபாகரன் ஏகாம்பரம் M.Sc.(Eng.)
Secretary : Kirupakaran Ehamparam M.Sc. (Eng.)

பொருளாளர் : சிவபாலன் சின்னத்தம்பி
Tresurer : Sivapalan Sinnathamby

வளலாய் பாரதி சனசமூக நிலைய உறுப்பினர்கள்
Valalai Bharathi Community Centre

செயல் அலுவலர்கள்

தலைவர் - செ துரைரத்தினம் சமாதன நீதவான்
(முழு இலங்கை)
0776743932

President : S. Thurairatnam JP (All Island)

செயலாளர் :செ. மோகனதாஸ்
Secretary : S.Mohanadas

பொருளாளர் :கி . சிவயோகம்
Tresurer : K. Sivajokam

உப தலைவர் :சு . குணபரன்
Vice President : S. Gunaparan

உ.செயலாளர் :தி .மகேந்திரன்
Vice Secretary : T. Mahendran

காப்பாளர் :வை. கந்தசாமி
Patron V. Kanthasamy

கணக்காய்வாளர் :நா . மகேந்திரம்
Auditor: N. Mahendran

செயற்குழு உறுப்பினர்கள்

சி . சயந்தன் - S. Sayanthan

கு . பிரபாகரன் - K. Prabhaharan

பா . சத்தியநாதன் - P. Sathiyanathan

கு . பிரணவன் - K. Pranavan

ச . ஞானரூபன் - S. Gnanaruban

கு . கிரிதரன் - K. Giritharan

த . தவயோகி - T. Thavayoki

சி . பரமானந்தம் - S. Paramanantham

Arulmihu Valalai Pillayar Temple Board of Trustee Members
அருள்மிகு வளலாய் பிள்ளையார் தேவாலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள்

செயல் அலுவலர்கள்

தலைவர்:- சண்முகநாதன் ஞானரூபன் - 0776063835
President : Shanmuganathan Gnanaruban

செயலாளர்:- திரு சிவலிங்கம் கமலகாந்தன் - 0772227708
Secretary:- Mr. Sivalingam Kamalakanthan

பொருளாளர்:- நாகலிங்கம் மகேந்திரம் - 0778332939
Tresurer:- Mr. Nagalingam Mahenthram

உப தலைவர் - திருஞாவுக்கரசு மகேந்திரம் - 0773724610
Vice President:- Mr. Thirunavukkarasu Mahenthiram

உப செயலாளர் - செ. மோகனதாஸ் -0777728400
Vice Secretary:- Mr. Selvarathinam Mohanathas

செயற்குழு உறுப்பினர்கள்

திரு து.சந்திரகுமார் / Mr. T. Santhirakumar

திரு நா. தவகுமார் / Mr. N. Thavakumar - 0777574579

திரு செ.இராசேந்திரம் / Mr. S. Rasenthiram

திரு த.தவயோகி / Mr. T. Tavayoki

திரு சி.சசிகாந் / Mr. S. Sasikanth

திரு கு.கிரிதரன் / Mr. K. Kiritharan

கி.சிவயோகம் / K. Sivayokam

க.சுகுணராஜ் / K. Sugunaraj

வளலாய் பெரிய நாகதம்பிரான் அறங்காலர் சபை உறுப்பினர்கள்
Valalai Periya Nagathampiran Board of Trustee Members

செயல் அலுவலர்கள்

தலைவர்:- செ துரைரத்தினம் சமாதன நீதவான்
(முழு இலங்கை)
0776743932

President : S. Thurairatnam JP (All Island)

செயலாளர்:- திரு கிருஸ்ணபிள்ளை குமரகுருலிங்கம்
Secretary:- Mr. Krishnapillai Kumarakurulingam

பொருளாளர்:- திரு கணபதிபிள்ளை பாலசுப்பிமணியம்
Tresurer:- Mr. Kanapathippillai Balasubramaniyam

உப தலைவர் - சிவநாயகம் சிவேஸ்வரன்
Vice President:- Mr. Sivanayagam Sivaneshwaran

செயற்குழு உறுப்பினர்கள்

திரு வ. கந்தசாமி - 0779001321 / Mr. V. Kanthasamy

திரு நா. தவகுமார் / Mr. N. Thavakumar - 0777574579

திரு சிவசம்பு பரமானந்தம் / Mr. S. Paramanantham

திரு த. கதிர்காமநாதன் / Mr. T. Kathirkamanathan

திரு ஏரம்பு சிவலிங்கம் / Mr. Erampu Sivalingam

திரு செல்வரத்தினம் மோகனதாஸ் / Mr. S. Mohanathas

திரு பாலகிருஸ்னன் குணாகரன் / Mr. P. Gunakaran

வளலாய் மேற்கு மீள்குடியேற்ற செயற்குழு உறுப்பினர்கள்
Valalai West Resettlement Committee Members

செயல் அலுவலர்கள்

தலைவர்:- திரு செல்லப்பு துரைரத்தினம்
               சமாதன நீதவான் (முழு இலங்கை)

President:- Mr. Sellappu Thurairatnam J.P. (All Island)

செயலாளர்:- திரு கி். குமரகுருலிங்கம்
Secretary:- Mr. K. Kumarakurulingam

பொருளாளர்:- எஸ் சிவேஸ்வரன்
Tresurer:-Mr. S. Siveshwaran

Rural Development Society Members
வளலாய் கிராம அபிவிருத்திச்சங்க குழு உறுப்பினர்கள்

செயல் அலுவலர்கள்

தலைவர்:- திரு செல்லையா தங்கராசா
President:- Mr. S. Thangarasa

செயலாளர்:- திரு செல்லத்தம்பி சுதன்
Secretary:- Mr. Sellathambi Suthan

உப தலைவர்:- திரு பவுலின் அப்பு எட்வேட் உதயகுமார்
Vice President:- Mr. Poulin Appu Edword Uthayakumar

உப செயலாளர்:- திரு பஸ்தியாம்பிள்ளை செல்வரத்தினம்
Vice Secretary:- Mr. Basthiyampillai Selvarathinam

பொருளாளர்:- திரு செல்லப்பு துரைரத்தினம்
                          சமாதன நீதவான் (முழு இலங்கை)
Tresurer:-Mr. Sellappu Thurairatnam J.P. (All Island)

செயற்குழு உறுப்பினர்கள்

திரு ந. மகேந்திரம் / Mr. N. Mahenthram

திரு நா. தவகுமார் / Mr. N. Thavakumar

திரு செ. மோகனதாஸ் / Mr. S. Mohanathas

திரு ம. ரமேஸ் / Mr. M. Ramesh

திருமதி மேரி புஸ்பராணி / Mrs. Mary Pushparani

திரு சி. செல்வரத்தினம் / Mr. C. Selvarathinam

திரு மா. சயேந்திரம் / Mr. M. Sayenthiram

 

 

 

Pillaiyar
Pillaiyar